பணிக்கு திரும்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து அலுவலகம் திரும்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவை கோவை சரக காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருளரசு பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் இவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் தற்போது பூரண குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

இவரை கோவை சரக காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அனிதா, விஜய கார்த்திக்ராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் லோகநாதன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.