சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார்.

பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1953ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் அவ்வமைப்பினால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இவ்வமைப்பு 1991ஆம் ஆண்டில் இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது. இவ்வகையில் இன்றைய இந்த சர்வதேச மொழிபெயர்ப்பு தினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறது எனலாம்.