கடைக்காரன் குட்டை தூர்வாரும் பணித் துவக்கம்

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அக்ருதி, சென்டனியல், கோவை புதூர், மான்செஸ்டர், மெரிடியன், வெஸ்ட் ஆகியவை இணைத்து கடைக்காரன் குட்டை தூர்வாரும் பணியை துவக்கியுள்ளனர்.

இதில் சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.