கே.பி.ஆர் கல்லூரியில் பொறியாளர்கள் தின கொண்டாட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கொடிசியாவின் தலைவர் ஆர். ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

சிறந்த பொறியாளர்கள் விருது, இளம் தலைமுறை பொறியாளர்கள் விருது, சிறந்த ஆசிரிய மேற்பார்வையாளர்கள் விருது போன்றவைகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியில் முதன்மை செயல் அதிகாரி ஏ. எம். நடராஜன், கல்லூரி முதல்வர் அகிலா, மெக்கானிக்கல் துறைத் தலைவர் குணசேகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.