ரசிகர்களுக்கு இரட்டை விருந்து தரும் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை கோடிக்கணக்கான ரசிகர்களை தனது நடிப்பு, நடனம், போன்றவையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். அவர் நடிப்பில் இந்தாண்டு வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

ஆனால் நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது ரசிகர்களின் ஏமாற்றத்தை தற்போது ஈடு செய்யும் வகையில் நடிகர் விஜய் ஒரு மெகா திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ள ரசிகர்களின் ஏமாற்றத்தை ஈடுசெய்ய நடிகர் விஜய் விரும்புவதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.

இந்த ஆண்டு முழுவதும் மாஸ்டர் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த தனது ரசிகர்களுக்கு வரவிருக்கும் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று “மாஸ்டர்” திரைப்படத்தை வெளியிடவும், அதே வருடம் தீபாவளிக்கு “தளபதி 65” படத்தை வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக தனது படப்பிடிப்பை வேகமாக நடத்துமாறு படக்குழுவிடம் விஜய் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே வரும் 2021ம் ஆண்டு தளபதி விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், “தளபதி 65” சன் பிக்சர்ஸ தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இசையமைப்பாளர் தமனின் இசையில் வெளிவரும் என்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவர வேண்டும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.