வோடபோன் மற்றும் ஐடியாவின் புதிய “வீஐ” தொலைதொடர்பு நிறுவனம்

வீஐ என்ற பெயரில் பிரமாண்டமாக தொலைதொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக வோடபோன், ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தாக்கர் தெரிவித்துள்ளார்.

புதிய பெயர் “வீஐ ” குறித்து தெரிந்துகொள்ள பெரும்பாலானோர் ஆர்வமாக இருக்கின்றனர். இது எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்றும் “வீ”ல் உள்ள “நான்” என்றும் பல கோணத்தில் இந்த பிராண்டின் புதிய பெயரை ட்விட்டரில் பேசு பொருளாக்கி வருகின்றனர்.

இருப்பினும் வோடபோன் மற்றும் ஐடியா பல்வேறு அவதாரங்களில், பல தசாப்தங்களுக்கும் மேலாக இந்த துறையின் வளர்ச்சியை தனித்தனியாக வழிநடத்தி வந்துள்ளனர். மேலும், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரண்டும் நெட்வொர்க் அனுபவம், கிராமப்புற இணைப்பு, வாடிக்கையாளர் சேவை, நிறுவன இயக்கம் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளன” என்று இந்த மறுபெயரிடுதலை “ஆதித்யா பிர்லா” குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்தார்.