கோவையில் ரெட்மி ஷோரூமுக்கு சீல்..!

கோவை நூறடி சாலையில் இயங்கி வரும் ரெட்மி ஷோரூமுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், வணிக வளாகங்கள் முறையான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், கோவை நூறடி சாலையில் உள்ள MI ஹோம் என்ற பெயரில் இயங்கி வரும் ரெட்மி ஷோரூமுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அந்த கடையில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமலும், குளிர்சாதன வசதியை பயன்படுத்தி வந்ததாலும் மாநகராட்சி பறக்கும்படை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். மேலும், அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.