வித விதமான விநாயகர்

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. குறிப்பாக வட மாநிலங்களில் இந்நாளில் வெகு விமர்சையான கொண்டாட்டம் நடைபெறும். இதன் தாக்கம் தமிழ்நாட்டில் சற்று குறைவென்றாலும் இதன் மீதான ஆர்வம் அதிகம்.

இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் களிமண்ணினால் செய்யப்பட்ட அவரவர் வசதிக்கேற்ப சிலை வாங்கி வைத்து வழிபாடு நடத்தி அதனை நீர்நிலைகளில் கரைப்பார்கள். சிலர் கையளவு சிலை வைப்பார்கள், சிலர் மாடி உயர சிலை வைப்பார்கள்.

அப்படியொரு இந்தியாவின் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை கொரோனாவின் பாதிப்பால் நாடுமுழுவதும் இயல்பு நிலையில் கொண்டாட முடியாத வண்ணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட தடைவிதித்து வீடுகளில் சிலை வைத்து வழிபட அறிவுரை வழங்கியது. அதன்படி பலர் வீடுகளுக்கு சிலை வாங்க ஆர்வம் காட்டினர்.

ஒரு சிலர் அதையும் தாண்டி விதவிதமாக தாமாக வீட்டில் உள்ள காய்கறிகள், பழவகைகள், பிஸ்கட், முந்திரி, வீட்டு பாத்திரங்கள், தேங்காய் சிரட்டை, பனை ஓலை வைத்தும் விநாயகர் உருவம் செய்து கலை மூலம் தனது பக்தியை திறமையுடன் வெளிப்படுத்துகின்றனர்.

பக்தி இப்படி திறம்பட வெளிப்படுத்தும் பொழுது பக்தியுடன் திறமையும் வளரும். மேலும் இது குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டாக இருந்தாலும் பயனுள்ளதாக இருக்கும்.