ஆடி கடைசி வெள்ளி முன்னிட்டு மாகாளியம்மனுக்கு காய்கறிகள் கொண்டு அலங்காரம்

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மாகாளியம்மன் கோவிலில் காய்கறிகள் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கோவை பெரியகடை வீதி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பழமையான இந்த கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

இந்த 4ஆம் வெள்ளியை முன்னிட்டு அவரக்காய்,  புடலங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை கொண்டு மாகாளியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அம்மனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் திரளாக வந்து வழிபட்டு சென்றனர்.