சிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்

கோவை மாவட்டம் சிறுவாணி பகுதியில் தென்மேற்கு பருவமழை சீராக பெய்து வருவதால் சிறுவாணி அணைப்பகுதிகளில் 202ஆஆ (மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது, சிறுவாணி அணையின் நீர்மட்டம் (2) இரண்டு அடியிலிருந்து 3 3/4 அடி அதிகாரித்து 5 3/4 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி 55MLD ஆக சீராக விநியோகிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” என்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.