சிவா டெக்ஸ்யான் சார்பில் தடுப்புப் பணி ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

கோவையை சேர்ந்த சிவா டெக்ஸ்யான் நிறுவனத்தின் சார்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல் துறை உட்பட பல்வேறு துறை ஊழியர்கள் பயன்பாட்டிற்கென முகக்கவசம் மற்றும் கையுறைகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும் பொது மக்களும் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் கரம் கோர்த்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த சிவா டெக்ஸ்யான்  நிறுவனம் சார்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் பயன்பாட்டிற்கென தரமான 5000 எஸ் 90 வகை  முகக்கவசங்கள் கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணியிடம் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராமன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுக்க கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கென 10,000 முக கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்க உள்ளதாகவும், இதன் முதல் கட்டமாக தற்போது எஸ் 90 தரத்திலான 5000 முகக்கவசங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் முதன்முறையாக குறைந்த விலையில் ஆண்டிவைரல் எனும் கொரோனா வைரஸ்களை அழிக்கும் முகக்கவசங்கள் தயாரிக்க உள்ளதாக கூறிய அவர் உலக சந்தையில் இது போன்று குறைந்த விலையில் முதன் முறையாக இந்த முகக்கவசங்கள் தயாரிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.