கே.பி.ஆர். கலை கல்லூரியின் இணையவழி யங் லீடர் – 2020

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மையியல் துறை சார்பில் யங் லீடர் – 2020 என்னும் பொருண்மையில் ஐந்து நாள் (2020 ஜூன் 22 முதல் 26 வரை) இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் முன்னணித் தொழில் நிறுவனங்களிலிருந்து தொழில்முனைவோர் பலரும் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் தொழில் முனைவுத்திறன், வழிநடத்துதல் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

முதல் நாள் நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தொழில்கள் பற்றியும் தொழில் மேலாண்மை பற்றியும் கூறினார். அவனிதா டெக்ஸ்டைல்ஸ் (பி) லிமிடெட், அபி கிரான் ஆர்கோ ஃபார்மர்ஸ் மற்றும் இ.ஆர்.பி வென்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் உமா சேகர் கலந்துகொண்டு ‘பெண் தொழிலதிபர்கள் சந்திக்கும் சவால்கள்’ என்னும் தலைப்பில் தொழில்முனைவோராக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துச் சிறப்புரை வழங்கினார்.

இரண்டாம் நாள் (23.06.2020) நிகழ்வில் எஸ்2எஸ் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி அகாடமி (ப) லிமிடெட்டின் பிரியா செந்தில் ‘தலைமைத்துவத்தின் சக்தி’ என்னும் பொருளில் சிறப்புரை வழங்கினார்.

மூன்றாம் நாள் (24.06.2020) நிகழ்வில் டேலன்ட் பட்டர்பிளைஸ் அமைப்பிலிருந்து நரம்பு உளவியல் நிபுணர் டாக்டர் விஜயகுமார் ‘உயரப் பறந்து கொண்டாடுவோம்’ என்னும் பொருளில் சிறப்புரை வழங்கினார்.

நான்காம் நாள் (25.06.2020) Youth Corp Training consultancy யின் தலைமை நிர்வாகியும் பயிற்சியாளருமான மணிகண்டன் சுந்தரேசன் சிறப்புரையாளராகக் கலந்துகொண்டு ‘கடினமான சூழ்நிலைக்குப் பிறகு இளைஞர்களின் வாழ்க்கை’ என்னும் பொருண்மையில் உளவியல் பூர்வமான தீர்வாகத் தனது சிறப்புரையை வழங்கினார்.

ஐந்தாம் நாள் (26.06.2020) நிகழ்வில் கார்ப்பரேட் டிரைனர் & கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின்  மேலாண்மையியல் துறை புலத்தலைவர் மற்றும் கே.பி.ஆர். மில் லிமிடெட்டின் பெண்பணியாளார பிரிவின் முதல்வர் சரவணபாண்டி Modern Leader – Is it Hard to Work With???  என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.