‘முப்படைகளும்’ குவிக்கப்பட்டதால் மிரண்டு போன சீனா!

இந்தியாவுடன் சண்டை போடும் சீனா இரவோடு இரவாக நடந்த இந்த மாற்றத்தால் மிரண்டு போய் நிற்கிறது.

கொரோனாவை பரப்பிவிட்டு உலக நாடுகளை முடங்கி வைத்த சீனா தற்போது இந்திய எல்லைகளை சொந்தம் கொண்டாட ஆசைப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கல்வான் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா இந்திய வீரர்கள் 20 பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாகியது. இதனால் சீன பொருட்கள் மீதான எதிர்ப்பு இந்தியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேலும், சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய மக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், எல்லையில் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. இந்த நிலையில், தென் சீன கடல் பகுதியில் இரவோடு இரவாக போர்க்கப்பல்களை அமெரிக்கா குவித்துள்ளது. சீனாவின் தென் கடல் பகுதியில் எண்ணெய் வளங்கள் அதிகம் இருப்பதால் இந்த பகுதிக்கு அமெரிக்கா-சீனா இரண்டு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.

பல வருடமாக நடைபெற்று வரும் இந்த சண்டை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு தற்போது அமெரிக்கா தன்னுடைய போர்க்கப்பல்கள், ஏவுகணைகளை குவித்து வருகிறது. சீனாவின் அறிக்கையின்படி, தென் சீன பகுதியில் அமெரிக்கா 3,75,000 படைகளை குவித்து இருக்கிறது. இதில் 60% கடற்படை தான். 40% தரைப்படை மற்றும் விமானப்படை ஆகும். இதனால் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு தற்போது சீனா பதிலடி கொடுத்துள்ளது.

அதில், ”தென் சீன கடலை அமெரிக்கா அபகரிக்க பார்க்கிறது. இது எங்களுக்கு சொந்தமான கடல். இங்கே அத்துமீறல்களை நிகழ்த்தினால் பொறுத்துக் கொள்ளமுடியாது. அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும். நினைத்து பார்க்க முடியாத பதிலடியை சீனா கொடுக்கும்,” என தெரிவித்து இருக்கிறது. கொரோனா விவகாரத்தில் இரண்டு நாடுகளும் தொடர்ந்து மோதி வருவது குறிப்பிடத்தக்கது.