பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை

கொரோனாவின் தாக்கம் மார்ச் மாதம் தொடக்கி தற்பொழுது வரை எப்பொழுது இது அடங்கும் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இதனால் சிறுவயதினர்கள் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில் பள்ளி கல்லுரிகள் காலவரையற்று மூடப்பட்டன.

இதில் தற்பொழுது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஊரடங்குக்கு முன் முடிந்துவிட்டதால் தற்பொழுது இதன் முடிவுக்காக காத்திருகின்றனர். 10 ஆம் பொதுத்தேர்வுகள் நடத்தமுடியாமல் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அணைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது கல்லூரிகளின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறாத நிலையில் இதுகுறித்து எந்தவித தகவல்களும் வரவில்லை. தேர்வுகள் நடைபெறுமா, இல்லையா என்பது குறித்து எந்த வித பதிலும் தெரியாமல் எதிர்பார்ப்புடன் காத்திருகின்றனர்.

இந்நிலையில் ஹரியானா மாநில பல்கலைகழகத்தின் துணை வேந்தர் தலையிலான நிபுணர் குழு பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.