பிஸ்தாவின் மருத்துவ குணம்

பிஸ்தாவில் பாஸ்பரஸ் அதிக அளவில் இருப்பதால், குளுக்கோஸை அமினோ அமிலமாகச் சிதைக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவு என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து.

மண்ணீரல், நிணநீர் பராமரிப்பு :

பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது செல்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நியாபக சக்தி :

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது, நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்சிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கிறது. மேலும் தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் நியாபக சக்தி அதிகரிக்கும்.

தோல் புற்றுநோய் :

இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது தோல் நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பருப்பில் உள்ள வைட்டமின் ஈ ஆனது புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

கண் பார்வை :

இந்த பருப்பை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது, கண்நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கண்ணுக்கு தெளிவான பார்வையை கொடுக்கக் கூடியது.

இதய நோய் :

இதய நோய் ஏற்படுவதில் இருந்து இந்த பருப்பு நம்மை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலிலுள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.

நீரிழிவு நோய் :

டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் பிஸ்தா காக்கிறது. ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல், பாஸ்பரஸ் இருக்கிறது.