மீண்டும் பயன்படுத்தக்கூடிய நாப்கின்

நவீன காலத்திலும் மாறாத ஒன்று நாப்கின். இது நமக்கு அறிமுகம் ஆகாத காலகட்டத்தில் இருந்து நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தித் துணியை பயன்படுத்தி வந்தார்கள். சிலர் துவைத்துப் பயன்படுத்துவார்கள், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியை புதைத்துவிடுவார்கள், அப்போது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

அந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள். துணியைப் பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பபை பிரச்சனை வந்ததா என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை.

இதுகுறித்து சில தகவல்கள் தெரிவித்தார் கோவையைச் சேர்ந்த இஷானா. இவர் பேசுகையில், இந்த நாப்கினில் லீக் புரூப் வைப்பதில்லை. காரணம் லீக் புரூப் வைத்தால் அதில் பிளாஸ்டிக் தன்மையை இணைக்க வேண்டும். அது எக்கோ ஃபிரண்ட்லியாக இருக்காது. மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் என்று கணக்கிட்டால் ஒரு பெண் குறைந்தபட்சம் 10 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். இது ஒரு வருடகணக்கில் பெரும் எண்ணிக்கையாக உள்ளது. இதனை பாதியளவாக குறைக்கவே நாங்கள் உழைத்து வருகிறோம் என்றார்.

பிளாஸ்டிக்கால் நம் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க இந்த நாப்கின்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். இது புதுமை இல்லை, பழமையை மீண்டும் புதுப்பித்துள்ளோம். இதனால் ஏற்கனவே இதனை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும், புதிதாக வந்தவர்களும் எங்களை விரைவாக திரும்பி பார்பார்கள் என்ற நம்பிக்கையில் இயங்கி வருகிறோம் என்று கூறிய இஷானா, இதனை துணி போல் எங்கும் எடுத்துச் செல்லலாம் மறைக்க வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தி சுகாதாரமாக  இருக்கலாம். மேலும் இதனால் சுற்றுச்சூழலும் மாசு ஏற்படாது என்றார்.

சுற்றுச்சுழலை பாதுகாக்க எடுத்துவரும் இந்த சிறு முயற்சியை அடுத்து ஆறு மாதத்துக்குள் தனது துறையில் 100 தொழில்முனைவோரை  உருவாக்க வேண்டும் என்றார்.