புதுப் பொலிவுடன் தயாரான பேருந்து நிலையங்கள்

கோவையில் கொரோனா தடுப்பு ஊரடங்கால் மூடப்பட்ட பேருந்து நிலையங்கள், வண்ணங்கள் பூசப்பட்டு புதிய பொலியுடன் செயல்படத் துவங்கியது.

முழு ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகள் இன்று முதல் இயங்க துவங்கியுள்ளது. இத்தனை நாட்களாக பேருந்து பயன்பாடு இல்லாததால் பேருந்து நிலையங்கள் காய்கறி சந்தைகளாக மாற்றபட்டிருந்து.

தற்பொழுது பேருந்துகள் இயக்கப்படுவதால் இதனை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டனர். தற்பொழுது ஐந்தாம் கட்ட ஊரடங்கு சில புதிய கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பேருந்துகள் 60 சதவிகித பயணிகளுடன் இயக்க தொடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து மூடப்பட்ட காந்திபுரம், உக்கடம், உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் அனைத்து பேருந்து நிலையங்களும் வண்ணங்கள் பூசப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளி கோடுகள் அமைக்கப்பட்டு ஒரு புதிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளை காய்ச்சல் பரிசோதனை செய்யும் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்துகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.