இந்தியாவில் 6 குப்பையில்லா நகரங்கள்

2019-20-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, குப்பைகள் இல்லா நகரங்களின் நட்சத்திர தகுதிப் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று நிகழ்ச்சி ஒன்றில், வெளியிட்டார்.

மொத்தம் 6 நகரங்கள் ( அம்பிகாபூர், ராஜ்கோட், சூரத், மைசூரு, இந்தூர், நவி மும்பை) 5 நட்சத்திர தகுதியைப் பெற்றுள்ளதாகவும், 65 நகரங்கள் 3 நட்சத்திர தகுதியும், 70 நகரங்கள் ஒரு நட்சத்திரத் தகுதியும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அறிவித்த நிலையில், குப்பை இல்லா நகரங்களின் நட்சத்திர தகுதிக்கான திருத்தப்பட்ட விதிமுறைகளையும் அவர் வெளியிட்டார்.