ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது ரயில்வே சிறப்புத் திட்டம்

 

முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வேறு ரயிலில் இடம் ஒதுக்கப்படுவதற்கான வசதி, ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயிலில் பயணம் செய்திடுவதற்காக முன்பதிவு செய்திடும்போது, காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிடும் பயணிகளுக்கு இறுதிநேரத்தில் டிக்கெட் உறுதி செய்யப்படாமல் போய் விடுவதால், அவதிப்படும் சூழல்நிலை நிலவி வந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள ரெயில் பயணிகளுக்கு ஏப்ரல் 1–ந் தேதி முதல் ரெயில்வே ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

பயணிகளின் முன்பதிவு பட்டியல் உறுதி செய்யப்படாதபோது, அவர்கள் பயணத்திற்கான வசதி மற்றொரு ரயிலில் டிக்கெட் உறுதி செய்து, இடம் ஒதுக்கித்தரப்படும் எனவும், அவர்களுக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதே கட்டணத்தில் பயணிப்பதற்கான வசதி ஏற்படுத்தபடும் எனவும் அறிவித்தார்