கொரோனாவால் – கால் டாக்ஸிகளின் கட்டணம் பாதியளவு குறைந்தது

இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணாமாக முடங்கி கிடக்கிறது. மேலும் 50% க்கும் மேற்பட்ட தேவைகள் குறைந்துவிட்டன. இதனால் ஓலா, உபர் போன்ற கால்டாக்சிகளின் கட்டணம் பெருமளவு சரிந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் எடுக்கப்பட்டுவருகிறது. தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.

கொரோனாவின் அச்சம் மக்களிடையே அதிக அளவில் இருப்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் போக்குவரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில் அவற்றை பெருமளவு சார்ந்து இயங்கும் ஓலா, உபர் போன்ற கால்டாக்சி நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மெரு கால்டாக்சி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீத கட்டண சலுகையில் சேவை வழங்கி வருகிறது. ஆனாலும் தங்களின் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன சி.இ.ஓ. நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார். கால்டாக்சி ஓட்டுநர்களும் கடுமையாயக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.