கொரோனவை கட்டுபடுத்த சீனா தெரிவித்துள்ள ஜப்பான் மருந்து

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரித்த Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 8968 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில்தான் அதிகம் பேர் உயிரிழந்தனர். சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கணக்குப்படி சீனாவில் இதுவரை 80,928, பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 3245 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிந்துள்ளனர். சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றிலும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 219265 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு இன்றிரவு பிரதமர் மோடி உரையாற்றுவதாக அறிவித்துள்ளார்.

உலகமே கொரோவிற்கு மருந்து கண்டுபிடிக்க கடுமையாக போராடி வருகிறது. சீனா மிகப்பெரிய அளவில் போராடி கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்தி உள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடானா சீனா 80 ஆயிரம் பேருக்கு பரவிய போதிலும் மரண விகிதம் 5 சதவீதம் என்ற அளவில் குறைத்துள்ளது. அதாவது 3245 பேர்தான் இதுவரை இறந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சீனாவின் மருத்துவ முறைதான் காரணமென்று சொல்லபடுகிறது.

சீனா அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் கொரானா பரவுவதை தடுக்க தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு விஷயங்களை செய்தது. அந்த நாட்டில் யார் யார் கொரோனா பாதிப்பில் உள்ளார்கள்,  எங்கு செல்கிறார்கள், எங்கு யார் யாருக்கு கொரோனா உள்ளது என்பதை அறிய வசதிகளை ஏற்படுத்தியது.

அத்துடன் ஒரே வாரத்தில் மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்தது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சையை அளித்தது. இந்நிலையில், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்மருந்தால் வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Favipiravir மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.