மன உணர்வுகளை அறிந்துகொள்ள உதவும் நவீன கருவி

நவீன தொழிநுட்பம் என்பது மனிதனின் தற்பொழுதைய மிக சிறந்த ஆயுதமாக உள்ளது. இதனை எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தானது. இந்த ஆபத்து தற்பொழுது வரை யாரையும் பெரிதாக பாதிக்கவில்லை என்றாலும் ஒரு சிலர் மறைமுகமாக பாதிக்கப்பட்டுதான் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதை விட பலர் வாழ்கை தரம் இதனால் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தற்பொழுது செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தற்போதைய வளர்ச்சியின் உச்சமாக இருக்கிறது.

தற்பொழுது அறிவியலால் முடியாத காரியம் என்பது எதுவும் இல்லை. அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹப்பீ இன்கார்ப்பரேஷன் நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக மனிதனின் உணர்வுகளை மதிப்பிடும் கருவியை உருவாக்கியுள்ளது. நெக் பேண்ட் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவியானது மின்காந்த அலைகளை செலுத்தி மனிதனின் உணர்வுகளை அறிந்து அது குறித்த தகவலை ஸ்மார்ட்போனுக்கு அனுப்புகிறது. இதிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் 22 கிலோ ஹெர்ட்ஸ் திறன் கொண்டவை.

இது உடலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட பிறகே இது சந்தையில் அறிகப்படுத்தப்பட்டது. மனிதனின் மன உணர்வுகளை ஸ்மார்ட்போன் மூலமாக தெரிந்துகொள்ளும்போது தங்களது நிலை உணர்ந்து தங்களது செயல்பாடு மேம்பட்டதாக இதை உபயோகித்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மனிதனுக்கு ஓய்வு தேவை என்பதையும் இது உரிய நேரத்தில் அறிவுறுத்துகிறது. இதனால் ஓய்வு கிடைத்து தங்களின் செயல்பாடு மேம்பட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்த பட்டையானது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்தனியான செயல்பாடுகளைக் கொண்டது. இதில் காக்னிடிவ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட இது பெரிதும் உதவுகிறது. இதன் செயல்பாட்டுக்கென பிரத்யேக செயலியையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. மனித வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கு உதவும் இந்தக் கருவி விரைவிலேயே இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.