கே.ஐ.டி கல்லூரியில் சர்வேதேச கருத்தரங்கு

கோவை, கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் “4ம்  இன்டர்நேஷனல் கான்பிரான்ஸ் ஆன் சயின்ஸ், டேக்னாலஜி, என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மேண்ட் (ICSTEM ‘2020’)” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நேஷனல் டிசைன் அண்ட் ரிசர்ச் ஃபோரமின் இயக்குனர் டில்லிபாபு மற்றும் நேஷனல் தொழில்நுட்பக் கல்லூரியின் டிபார்ட்மென்ட் ஆப் புரொடக்க்ஷன் என்ஜினீயரிங் அசோசியேட் டீன் பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, துணைத்தலைவர் இந்துமுருகேசன், முதல்வர் மோகன்தாஸ்காந்தி, துணை முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ –மாணவிகள்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.