அம்மா அகடாமி வழங்கும் மத்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முக தேர்வுக்க இலவச சிறப்பு பயிற்சி

ஐ.ஏ.எஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது. மத்திய தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் முதன்மை தேர்வில் தகுதி பெற்ற தமிழ் நாட்டை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையத்தின் சார்பில் சென்னை மற்றும் கோவையில் மூத்த குடிமைப்பணி அதிகாரிகள் ஆளுமைத் தேர்வும் ஒருநாள் சிறப்பு வகுப்பும் நடத்தப்படவுள்ளது.

மாதிரி ஆளுமைத் தேர்வு பற்றிய மேலும் விவரங்களை இப்பயிற்சி  மைய இணையதளத்தில் www.ammaiasascademy.com -ல் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 0422-2472222 வாட்ஸாப் – 8760674444