மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல், யாருடைய குரலில் தெரியுமா ?

மாஸ்டர் படத்துல ஒரு குட்டி கதை சொல்லப்போறது யாருன்னு நம்ம அனிருத்தே சொல்லிட்டாரு.
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது என்று அறிவிப்பு வெளியானது. இந்த பாடல் யாருடைய குரலில் இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இந்த பாடலை பாடப்போவது தளபதி விஜய் தான்னு, இசையமைப்பாளர் அனிருத்தே சொல்லிட்டாரு. அப்பறம் என்ன விஜய் ரசிகர்கள் இப்பவே ட்விட் போட்டு கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் திரும்ப வந்துட்டோம்…

தளபதி விஜய் அவர்கள், தி மாஸ்டர் அவரது குரலில் உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்லப் போகிறார்…

பிப்ரவரி 14, மாலை 5 மணிக்கு….

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனிருத்தை கட்டியணைக்கும் விஜய்

இந்த ட்விட்டில் அவர் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். தன்னை விஜய் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படம் அது. மங்கிய பின்புலத்தில், அவர்கள் இருவர் மீது மட்டும் ஒளி வீசுகிறது.

 

 

Source : THE TIMES OF INDIA