என்.ஜி.பி விளையாட்டு விழா

டாக்டர் என்.ஜி.பி. தொழில் நுட்பக்கல்லூரியில் 13ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி அண்மையில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியின் தலைவர் டாக்டர் நல்ல.ஜி.பழனிச்சாமி கொடி ஏற்றி வைத்து, கல்லூரியின் செயலாளர் டாக்டர் தவமணி தேவி பழனிச்சாமி ஒலிம்பிக் ஜோதி ஏற்றி விழாவை துவக்கிவைத்தனர். டாக்டர் ஓ.டி.புவனேஸ்வரன் முதன்மை செயல் அதிகாரி, முதல்வர் டாக்டர் பொற்குமரன் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர்.

13 க்கும் மேற்ப்பட்ட தடகள போட்டிகள் மற்றும் 4 மைதான போட்டிகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர். விளையாட்டு தினத்திற்கு முன்னதாக 7 குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தீபிகா III -ECE மற்றும் ஆண்டனி பிரகாஷ் III -MECH ஓட்டுமொத்த சம்பியன்ஷிப்பை பெற்றனர்.