உலகை ஆளும் திறன் என்ஜினியருக்கு உள்ளது

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பொறியியல் துறை பற்றிய தவறான கருத்துகள் பற்றியும், இத்துறையின் எதிர்காலத்தை பற்றியும் அதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்தும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேச்சாளர் ஜெயபிரகாஷ் காந்தி உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி முதல்வர் அகிலா, நிர்வாக அதிகாரி ஏ.எம். நடராஜன் ஆகியோர் முதன்மை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர் பேசுகையில், எப்பொழுதுமே போலிசை விட பொறியாளர் தான் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை விட திறமையில்ல திண்டாட்டம் தான் அதிகம். இந்த துறையில் தேவைகள் இருக்க தான் செய்கிறது. ஆனால், அதற்கு திறமைகள் தான் தேவைகளாக இருக்கிறது. யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பதால், நீங்களும் அரசியலுக்கு வரலாம் அதில் தவறில்லை. ஏனென்றால் உங்களால் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்க முடியும். அதனால் உங்களுக்கு உலகையும் ஆளும் திறன் உள்ளது என்றார்.