கோவை மண்டல யூகோ வங்கியில் “சில்லறை கடன் மையம்” துவக்கம்

 

கோயம்புத்தூர், டிசம்பர் 3, 2019 – நாட்டின் பொதுத்துறை வங்கியான யூகோ வங்கியின் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில் கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம், எண். 22, பாதர் ராண்டி சாலையில் உள்ள விஜய் டவர்ஸ் முதல் தளத்தில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் “சில்லறை கடன் மையம்” (ரீடெயில் லோன் ஹப்) துவக்க விழா நடைபெற்றது.
இந்த “சில்லறை கடன் மையத்தை” யூகோ வங்கியின் தலைமை அலுவலக கிரெடிட் மானிடரிங் டிபார்ட்மெண்ட், பொது மேலாளர் சன்சல் மசும்தார் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். அப்போது யூகோ வங்கியின் மண்டல மேலாளரும், துணைப் பொது மேலாளருமான  சி. ஏ. நாகரத்னா மற்றும் கோவை மண்டல சில்லறை கடன் மையம் தலைவரும் முதன்மை மேலாளருமான ஐ. அந்தோணி அருண் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சில்லறை கடன் மையம் பற்றி துணைப் பொது மேலாளர் சி. ஏ. நாகரத்னா கூறியதாவது :- இன்று துவங்கியுள்ள இந்த சில்லறை கடன் மையம் பிரிவில் கோவை நகரில் அமைந்துள்ள 6 யூகோ வங்கி கிளைகள் செயல்படும். இந்த சில்லறை கடன் மையம் வீட்டுக் கடன், வாகனக் கடன், சொத்து அடமானக் கடன், கல்வி கடன், தனி நபர் கடன், யூகோ வாடகை கடன் போன்ற கடன்கள் பரிசீலிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படும். இந்த சில்லறை கடன் மையம் அர்ப்பணிப்புடன் செயல்படும் 3 பேர் கொண்ட குழு இந்தக் கடன்களை விரைவாக பரிசீலித்து வழங்கும். கடன் தேவைப்படுவோர் யூகோ வங்கியின் கிளையில் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், அந்த படிவங்கள் வங்கி கிளையின் மூலம் சில்லறை கடன் மையத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு கடன்கள் விரைவாக வழங்கப்படும்.

இது போன்ற சில்லறை கடன் மையம்கள் இது வரை மெட்ரோ சிட்டியில் மட்டும் செயல்பாட்டில் இருந்தது. தற்போது இரண்டாம் நிலை நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சில்லறை கடன் மையத்தில் வீட்டுக் கடன் ரூபாய் 1 கோடி வரை உடனடியாக அப்ரூவல் கிடைக்கும். கோவை மண்டலத்தில் யூகோ வங்கிக்கு மொத்தம் 60 கிளைகள் உள்ளன. இதில் 42 கிளைகளில் ஏற்கனவே ஏடிஎம் மெஷின்கள் உள்ளன. மீதமுள்ள கிளைகள் இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் நிறுவப்படும். தற்சமயம் உடனடியாக புதியதாக 7 ஏடிஎம் டெஷின்கள் நிறுவப்படவுள்ளன. இந்த நிதி ஆண்டில் யூகோ வங்கியின் கோவை மண்டலத்தில் உள்ள 60 கிளைகள் மூலம் இது வரை சுமார் 105 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31 – ம் தேதிக்குள் மீதம் உள்ள 95 கோடிக்கு கடன் வழங்கப்படும். இது இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 200 கோடியாக எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யூகோ வங்கியின் ஒவ்வொரு கிளையும் மாதம் 4 வீட்டு கடன் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுவருகின்றது என்று அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*