தையலுக்கு பதில் பிளாஸ்திரி

அறுவைச் சிகிச்சை உலகமெங்கும் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் சர்வசாதரணமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் உடல்நிலை சரியில்லை என்றால் மருந்து மாத்திரைகளோடு முடிந்து விடும். ஆனால், தற்பொழுது இது அறுவை சிகிச்சை வரை சென்றுவிடுகிறது. இதன் இறுதியில் தையல் போடவேண்டியிருக்கும். அப்பொழுது தான் வெட்டுபட்ட இடம் ஒன்றுசேரும் என்று. ஆனால், தற்பொழுது இதற்கு மாறாக வெட்டபட்ட இடத்தில் ஓட்ட புதிய ஒட்டுப் பிளாஸ்திரியை, அமெரிக்காவின், எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மழைக்காலத்தில் சிலந்திகள், இரைகளைப் பிடிக்க பயன்படுத்தும் ஒருவகை வேதிப் பொருளை கருவாக கொண்டு, புதிய பிளாஸ்திரிக்கு தேவையான பிசினை உருவாக்கியதாக எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை நுரையீரல், குடல் போன்ற ரத்த ஈரம் உள்ள பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்த பின், இந்த புதிய பிளாஸ்திரியை போட்டு ஒட்டினால், காயம் ஆறும்வரை அது பாதுகாப்பாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.