‘இறைநெறிச் செம்மல்’ விருது வழங்கும் விழா

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில் ‘இறைநெறிச் செம்மல்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொறியாளர் வி.எஸ். ஜெயபால் மற்றும் மருத்துவர் எஸ். வேலுமணி ஆகியோருக்கு  ‘இறைநெறிச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.
இவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை பல ஆலயங்களை மேம்படுத்துவதில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இவர்களின் இறைப்பணியை பாராட்டும் விதமாக இவர்களுக்கு ‘இறைநெறிச் செம்மல்’ விருது வழங்கியது கோவை நன்னெறிக் கழகம்.
கோவை நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயகாகோ சுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார், கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை ஏற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஸ்ரீநரசிம்மப்பிரியா ஆன்மிக இதழின் ஆசிரியர் அனந்த பத்மநாபாச்சாரியார் சுவாமி மற்றும் சென்னை தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிறுவனர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.