புதுச்சேரி அரசால் அங்கீகரிக்கப்படும் பரியேறும் பெருமாள்

2018 ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்களில், பரியேறும் பெருமாள் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. இந்த திரைப்படம் கதிர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதன் கதை கரு, இன்றைய கால கட்டத்தில் வெளியாகும் திரைப்படங்களின் கதைகளில் முற்றிலுமாக வேறுபட்ட ஒன்றாகும். கீழ் ஜாதி, மேல் ஜாதி என இருபிரிவுகளாக  பிரிந்திருக்கும் சமுதாயத்தினரின் இடையில் ஏற்படும் கருத்து வேற்பாடுகளை விவரிக்கும் கதையாக இருக்கும். இந்த திரைப்படத்தில் இதற்கான ஒரு தீர்வையும் கொடுத்துள்ளார் இந்த திரைப்படத்தின் இயக்குனர்.

ஏற்கனவே, தமிழில் மட்டுமல்லாமல் பல மொழி விருது நிகழ்ச்சிகளில் இந்த திரைப்படம் விருது வாங்கி இருக்கிறது. இந்நிலையில், தற்பொழுது புதுச்சேரி அரசின் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக,  பரியேறும் பெருமாள் படம் தேர்வாகியுள்ளது. வரும் 13ஆம் தேதி நடக்கும் விருது வழங்கும் விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் நாராயணசாமி வழங்குகிறார்.

இது தமிழ் சினிமா, உலகத்தரத்திற்கு சென்று கொண்டிருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.