பூம்புகார் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை ஆரம்பம்

கைவினை என்ற தொன்மையான கலையை பாதுகாப்பது மட்டுமின்றி கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட (டவுன் ஹால்) பூம்புகார் என அறியப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகதின் சார்பில் ஒவ்வொரு பண்டிகைக்காலங்களிலும் பல கண்காட்சி நடத்தி வருகின்றது.

இதே போல் இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ‘கொலு பொம்மைகள்’ என்ற பெயரில் சிறப்பு கணக்காட்சி மற்றும் விற்பனையை ஆரம்பித்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி துவக்கி வைத்தார்.  இந்த கண்காட்சி 12.10.2019 வரை நடைபெறுகிறது. ஞாயிரு உட்பட தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும்.

இக்கண்காட்சியில் பரப்பாச்சி பொம்மைகள், அத்திவரதர், அஷ்டலட்சுமி, தசாவதாரம், ராமர் செட், கல்யாணசெட்,கிருஷ்ணலீலை செட், கொலு அலங்கார செட், கொலு படிகள், பரிசு பொருட்கள் மற்றும் கொலு அலங்கரிங்க தேவையான பொருட்கள் இது போக இன்னும் ஏராளமான பொருட்கள் இங்கு கண்காட்சிக்கு, விற்பனைக்கும் உள்ளது.

இந்த பொருட்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, போன்ற பகுதிகளிருந்து பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கொலு பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுப்படி வழங்கப்படுகிறது.