அரிமா சங்க பதவி ஏற்பு விழா

கோவை, சூலூர் மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்றனர். தலைவர் ஜோட்டிகுரியன், செயலாளர் ராதிகா, குமார், பொருளாளர்கள் மணிகண்டன், சம்பத்குமார் ஆகியோர் பதவியேற்றனர். முன்னாள் ஆளுநர் சிஜி டேவிட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் ஆளுநர் ரங்கநாதன் புதிய உறுப்பினர்களை சேர்த்தார். முன்னாள் ஆளுநர் மோடிலால் கடாரியா சிறப்புரையாற்றினார். பின்னர் ஸ்ரீனிவாசன் நடப்பாண்டிர்கான சமூக சேவைகளை துவக்கி வைத்தார். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் விழாவில் சிறப்புரையாற்றினார். ஆடிட்டர் செல்வராஜ், வி.பி.பாண்டியன், எஸ்.எஸ்.ரவீந்திரன், ஜான் போஸ்கோ, சண்முக பாண்டி, வழக்கறிஞர் கந்தநாதன் ஆகியோரும் விழாவில் உரையாற்றினார்.