“தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்லொழுக்கம் இவை மூன்றும் வெற்றிக்கு வழி வகுக்கும்”

 – சந்திரகலா ஜெயபாலன்

ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை மற்றும் அனைத்து முதுகலை மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது.

விழாவில் மேலாண்மை துறை தலைவர் சரவணபாண்டி கல்லூரி முதல்வர் சுப்ரமணி மொழி புல தலைவர்  மஞ்சுளா சுரேஷ் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சந்திரகலா ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருத்தினாராக பங்கேற்ற தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சந்திரகலா ஜெயபாலன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் தன்னுடைய அனுபவங்களையும், மாணவர்களோடு பகிர்ந்துகொண்டார். அதோடு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்லொழுக்கம் ஆகிய மூன்றும் வாழ்வின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 150 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.  மேலாண்மை துறை உதவி பேராசிரியை அவர்கள் நன்றியுரை வழங்கினார்.