எச்.ஐ.வி க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

உலகின் மிக பெரிய உயிர் கொல்லி நோய் நாம் அனைவரும் அறிந்த எய்ட்ஸ் நோய். இதற்கு காரணம் எச்.ஐ.வி. கிருமி. இது எப்படி பட்ட ஆளாக இருந்தலும் அவரது உடலில் இருந்து அவரது சக்திகளை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி அவரின் உயிருக்கு உலைவைத்து விடும்.

பல ஆண்டுகளாக இந்நோயிற்கான மருந்தை கண்டுபிடிக்க உலகில் பல  ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக தற்பொழுது ஒரு எலியின் உடலில் இருந்து எச்.ஐ.வி. கிருமி நீக்கப்பட்டது. இதுதான் இந்த ஆராய்ச்சியின் தேடல்களுக்கு ஒரு முடிவாக அமைந்துள்ளது.

எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு எலியின் உடலில் புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதனுள் செலுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த மருந்து, எலியின் ஜீன்-களில் இருந்து எச்.ஐ.வி கிருமி முற்றிலுமாக நீங்கியுள்ளது. எச்.ஐ.விக்கான தீர்வு கிடைப்பதில் இது முதல் வெற்றி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் அடுத்தகட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.