பொருளாதார ஆய்வறிக்கையில் ‘ஸ்வச் பாரத்’ பெயரை ‘சுந்தர் பாரத்’ என மாற்ற பரிந்துரை

‘ஸ்வச் பாரத்’ பெயரை ‘சுந்தர் பாரத்’ என மாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சமூக நல திட்டங்கள், வரி விதிப்பு திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் இலக்கை மக்கள் சரியாக புரிந்து கொள்ளும் வகையில் அதன் பெயர்களை மாற்ற வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தை குறிப்பிடும் ‘ஸ்வச் பாரத்’ என்பதை ‘சுந்தர் பாரத்’ என்று மாற்ற வேண்டும்.

‘சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுப்போம்’ என்பதை ‘சமையல் எரிவாயு மானியம் பற்றி சிந்திப்போம்’ என குறிப்பிட வேண்டும்.

‘வரி ஏய்ப்பு’ என்பதை ‘இணக்கமாக வரி செலுத்துதல்’ என மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் வளர்ச்சியில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறு மற்றும் குறுந்தொழில்கள் பொறுத்தவரையில் அமைப்பு சார்ந்த தொழில்கள் துறையில், 100 தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களின் அளவு 50 சதவீதமாக உள்ளது.

ஆனால் இந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குவது வெறும் 14 சதவீதம் மட்டுமே. அதுபோலவே உற்பத்தி திறனும் 14% சதவீதமாக மட்டுமே உள்ளது. பெரிய தொழில் நிறுவனங்களின் அளவு 15 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் 75 சதவீத அளவுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன் 90 சதவீத அளவுக்கு உற்பத்தி திறனும் கொண்டுள்ளது.

source : https://bit.ly/2Nycgd7