வேலை வாய்ப்பு பெற நுணுக்கமான யுக்திகளைக் கையாள வேண்டும் – மயில்சாமி அண்ணாதுரை

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்  கல்லூரியில் KIT மற்றும் ஹலோ FM  இணைந்து நடத்தும் “தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு விழிப்புணர்வு முகாம்” அண்மையில் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ISRO இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அரசு தொழில் நுட்பக் கல்லூரி கணினி பொறியியல் (CSE) துறை இணை பேராசிரியர் ரதி, மற்றும் கல்லூரி நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இவ்விழாவில் கல்லூரி துணைத் தலைவர் இந்துமுருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், கல்லூரி டீன் சுரேஷ், அனைத்து துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு  சிறப்பு விருந்தினரை, பெற்றோர்கள் மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்றனர். இவ்விழாவில் சுமார்  1820 மாணவ-மாணவியர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை, அவர்கள் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினருக்கு பொறியியல் மிகவும் அவசியம் மற்றும் தொழில் கல்வி அறிவோடு கூடிய திறன் வளர்த்தல், தகவல் தொழில் நுட்ப அறிவு ஆகியவை இன்றியமையாதது என்றும், இளம் வயதில் மாணவ மாணவிகள் கற்ற கல்வியையும், தனித்திறமைகளையும் பல்வேறு துறைகளில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். வேலை வாய்ப்பு பெற என்னென்ன நுணுக்கமான யுக்திகளைக் கையாள வேண்டும் என்பதை மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அதன் பின்னர் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளோடு கலந்துரையாடலில் பங்கேற்றார்.

தொடர்ந்து இணை பேராசிரியர் ரதி, பேசுகையில் பொறியியல் பொது கலந்தாய்வில் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் எந்தெந்த நாட்களில் தங்கள் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்கம் (DOTE) கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் மற்றும் பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வு முறைகளை படிப்படியாக விளக்கினார்.

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு விழிப்புணர்வு முகாம் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் கல்லூரிகள் பெற்ற நாக் (NAAC), NBA, தன்னாட்சி (AUTONOMOUS) உட்பட  அனைத்து விவரங்களும் பற்றி விளக்கி கூறினார்.