வேகமாக வறண்டு கொண்டிருக்கும் புழல் ஏரி

சென்னைக்கு சோழவரம், புழல் ஏரிகள் மூலமாக தான் பெரும்பாலான தண்ணீர் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. இதில் புழல் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளில் 4 ஆயிரத்து 380 மில்லியன் கன அடி நீரைத் தேக்க முடியும். சென்னையின் முக்கிய தண்ணீர் தேவைக்கு இந்த இரண்டும் தான் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் பருவ மழை பொய்ததால் இவைகள் வரண்டு கொண்டிருக்கிறது.

குறிப்பாக புழல் ஏரியானது வறட்சி நிலையை எட்டி விட்டது. இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் பார்க்கும் பொழுது எவ்வளவு நீர் வற்றிருக்கிறது, இன்னும் எவ்ளவு நீர் வற்றி இருக்கிறது என்பது நமக்கு தெளிவாக தெரியுகிறது.

இது, கடந்த ஆண்டு இருந்ததை விட மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம் என்பது நமக்கு தெளிவாக தெரிவிக்கிறது.

source: polimer