இந்த கடையில் பீட்சா இலவசம்

சராசரி மனிதன் இன்றைய காலகட்டடத்தில் செய்தி பரிமாறுவதற்கான கண்டுபிடிப்புகளில் உச்சகட்ட கண்டுபிடிப்பு இந்த செல்போன் தான். இது செய்தி பரிமாறுவதற்காக மட்டுமின்றி பொழுதுபோக்குகாவும் இதனை பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இதில் இணையதளம் இருப்பதால் இந்த முழு உலகமே இதில் அடங்கிவிடுகிறது. அதனால் இன்று குழந்தைகளில் இருந்து ஒய்வு பெற்ற முதியவர் வரை அனைவரின் கைகளிலும் இந்த செல்போன் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது அனைவரையும் அடிமைபடுத்துகிறது.

இதனை குறைக்க கலிபோர்னியாவில் ஃப்ரெஸ்னோ நகரில் கரி பீட்சா நிறுவனம் உள்ளது. இந்த உணவகத்தில் சாப்பிட ஒரு சிறப்பு சலுகைகளையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் ‘குழுவாக வருபவர்களில் குறைந்தபட்சம் நான்கு பேர்  செல்போன் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு இலவசமாக பீட்சா வழங்கப்படும், அதனை இவர்கள் அடுத்தமுறை வரும் பொழுதோ அல்லது வீட்டுக்கு செல்லும் பொழுதோ இதனை பெற்று செல்லலாம் ‘ என்று குறிப்பிட்டுள்ளனர்.

சாதாரணமாக அனைவரின் கைகளிலும் இந்த செல்போன் இருக்கிறது, அதனை குறைப்பதற்கு இவர்கள் கையாண்ட முறை சிறப்பான ஒன்றாகும். இதே போல் நம் ஊரிலும் அறிவிப்பு விடுத்தால் கடைகளில் விற்பனையும் அதிகரிக்கும், மக்களிடையே செல்போன் மோகமும் குறையும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*