விளையாட்டு வீரர்கள் தேர்வு

காரமடை டாக்டர் ஆர்வி கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடந்த விளையாட்டு வீரர் தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியின் விளையாட்டுத்துறை சார்பில் 2019- 20ஆம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்களை தேர்வு செய்து இலவச கல்வி, சீருடை, உள்ளிட்ட வசதிகளை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தித் தருகிறது. கபடி போட்டிகளுக்கான தேர்வு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது தேர்வில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு உடல் திறன், தடுப்பாட்டம், விளையாட்டு நுணுக்கம் மற்றும் சான்றிதழ் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.