ஈசா கல்லூரியில் புரோ கபடி

கோவை நவக்கரை சாலையில் உள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பில் 11-வது ஈசா சாம்பியன் டிராபி 2019 புரோ கபடி   போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தொடங்கிய இந்தப் போட்டிகள்,   2 நாட்கள் நடக்கிறது   கல்லூரியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் இப்போட்டிநடைபெற்றுவருகிறது.. இப்போட்டியின் கல்லூரி தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ் தொடங்கி வைத்தார்.

நாக்அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகள், கோவை மாவட்டங்களிலிருந்து மொத்தம் 16 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில், மகுடத்தைச் சூடும் அணிக்கு , கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

போட்டி தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரி தலைமை செயல் அதிகாரி அஜித், நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் சுதாகர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*