நாட்டிலேயே முதல் முறையாக லித்தியம் பேட்டரியால் இயங்கும்  வாகனம்

நாட்டிலேயே முதல் முறையாக லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஜப்பான் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹஷிகோ க்ரீன் வீல் எனும் நிறுவனம் லித்தியம் பேட்டரியின் மூலம் இயங்கும் புதிய வகை நவீன இரு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. ஜப்பான் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட  இந்த புதிய வகை இருசக்கர வாகனம் அறிமுக நிகழ்ச்சி கோவையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. முன்னதாக வாகனத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நிறுவன செயல் அதிகாரி,மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்தப்பட்டிருந்தாலும் அவை பல்வேறு தொழில்நுட்ப பிரச்சிணைகளால் மக்கள் மத்தியில் முழுமையாக சென்று சேர்வில்லை என்றும் அதற்கான புதிய முயற்சியாக அதிக மைலேஜ் தரும் வகையில் மாற்றத்தக்க லித்தியம் பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஒரு மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் எனவும் அனேக இடங்களில் பேட்டரி சார்ஜ் செய்யவும் பேட்டரிகளை விற்பனை செய்யவும் மையங்கள் விரைவில் துவங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அதிக வெப்பமடையாத வகையிலும் பாதுகாப்பான வகையில் பேட்டரிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலேயே செலவீனம் இருக்கும் எனவும் கூறியதுடன் ஆரம்ப விலையாக 39 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று வகை வாகனங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.