இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்  பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. கோவை அவினாசிரோடு நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு இன்று  இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியிலிருந்து அம்மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்கள் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் அனைத்து ஊழியர்கள், மாணாக்கர்கள் இந்துஸ்தர்ன குழுமத்தின் நிறுவனங்கள்  தொழிற்சாலைகளில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு ரு.25,00,000 மதிப்பிலான அரிசி, பருப்பு, போர்வை, பாய் அனைத்து வகையான உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியன வழங்கப்பட்டன. இப்பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரனி வட்டம் கீறமங்கலத்திற்கும், திருவாரூர் மாவட்டம் கட்சனம் கிராமத்திற்கு அருகில் உள்ள ஆப்பர்குடி என்ற கிராம மக்கள்  மொத்தம் 1000 பேருக்கு வழங்கப்பட்டது.

நிவாரணப் பொருட்கள் வழங்கியது மட்டுமல்லாமல் , இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் கல்லூரி மாணவர்கள் இந்த  ஊர்களில் , அங்கேயே தங்கியிருந்து அம்மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர். இந்நிவாரணப் பொருட்களை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் திருமதி.சரஸ்வதி கண்ணையன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். செயலாளர்.முனைவர் பிரியா சதீஷ் பிரபு முதல்வர் முனைவர்.பொன்னுசாமி மற்றும் பேராசிரியர், பேராசிரியைகள்,அனைத்து ஊழியர்கள், மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.