பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியில் வினாடி- வினா போட்டி நடைபெற்றது

கோவையில் உள்ள பி எஸ் ஜி செவிலியர் கல்லூரி ஆண்டுதோறும் செவிலியர் கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி- வினா என்ற நிகழ்ச்சி போட்டியை நடத்தி வருகிறது. இதில் இரண்டு செவிலிய பாடங்கள் மற்றும் பொது அறிவு வினாக்கள் தொகுத்து வழங்கப்படும். இந்த வினாடி வினா போட்டியானது தனி நபர்களின் அறிவு, அணுகுமுறை மனப்பான்மை மற்றும் திறமையின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த 20 ஆவது வினாடி வினா போட்டியானது இன்று நடைபெற்றது. தென் மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்றது. பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் ஜெயசுதா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மாணவ மாணவியர்களின் அடிப்படை செவிலியர் துறை, மருத்துவ் சிகிச்சை துறையின் கல்வித் திறனையும் மற்றும் பொது அறிவு பிரிவில் சிறந்த பங்களிப்பையும் வெளிக்கொண்டு வருகிறது. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் முதல் நிலைத் தேர்வு பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியில் நடைபெற்றது . இந்த போட்டியில் கேரளா , கர்நாடகா, மற்றும் தமிழகத்தில் இருந்து 34 குழுக்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.