சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் குழந்தைகள் புத்தகப் பயணம் தொடக்க விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்து உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புக் பார் சில்ரன் இணைந்து நடத்தும் குழந்தைகள் புத்தகப் பயணம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலர் முகமது பாசா, தனது அறிமுக உரையில், புத்தகங்களை குழந்தைகளிடத்தில் நேரடியாக கொண்டு சேர்க்கின்ற நோக்கத்திற்காக குழந்தைகள் புத்தக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவை, ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு புத்தகங்கள் அடங்கிய வாகனம் பயணம் செய்யும்.

அதன் மூலம் பள்ளிக் குழந்தைகள், தாங்கள் விரும்புகின்ற துறை சார்ந்த புத்தகங்களை வாங்கி பயன் பெறுவர் என்றார். குழந்தைகள் புத்தக பயணத்தை தொடங்கி வைத்து பேசிய பள்ளி செயலர் தமிழ் செம்மல் சிந்தனை கவிஞர் கவிதாசன், தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கத்தின் மூலம், வித்யாசமான சிந்தனைகளையும் புதியன படைக்கின்ற ஆற்றலையும் பெறலாம். ஏன் ?எப்படி ? என்ற கேள்விகளுக்கு விடைகளை புத்தகங்கள் வழங்குகின்றன. மாணவ பருவத்தில் தேர்விர்காகவும், வளரிடம் பருவத்தில் வேலை வாய்ப்பிர்காகவும் வாசிக்கின்றோம். நல்வாழ்விற்கு வாழ்நாள் முழுவதும் வாசித்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். கோவை நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் கோவிந்தசாமி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த ரிசி சரவணன், கண்ணபிரான், பாலக்ருஷ்ணன், மகபுநிசா, மணி, ஹம்சா, மஸ்தான், ஆகியோர் கலந்து கொண்டனர்.