வியப்பில் ஆழ்த்தும் சுகுணா கல்விக் குழுமத்தின் பணிகள் – சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்

சுகுணா கல்விக் குழுமம் சார்பில் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உடனான சந்திப்பு நிகழ்வு சுகுணா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சுகுணா கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணசாமி வரவேற்புரை வழங்கினார். சுகுணா பொறியியல் கல்லூரியின் இயக்குநர் பிரகாசம் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய முத்துவேல், “கல்வித்துறையில் சிறப்பாக செயலாற்றி வரும் சுகுணா கல்விக் குழுமத்தின் பணிகள் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. அதற்கு எனது வாழ்த்துக்கள். மேலும் இந்த நிகழ்விற்கு அழைத்ததற்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், இஸ்ரோவை குறித்தும் செயற்கைகோளை குறித்தும் விளக்கப்படத்தோடு மணவர்களிடம் விவரித்தார். அதோடு சந்திராயன் 3 செயல்படும் முறையையும், அதில் தான் சந்தித்த அனுபவங்களையும் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அதுமட்டுமன்றி நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்தார்.

நிறைவாக சுகுணா கல்விக் குழுமத்தின் தலைவர் சுகுணா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.