நவராத்திரி கண்காட்சி…கலைகட்டும் கொலு…!

நவராத்திரி நெருங்குவதை முன்னிட்டு இந்த ஆண்டு கொலுவிற்குப் புதுமையான பல்வேறு பொம்மைகள் கொலுவிற்கு வந்துள்ளன.

அந்த வைகையில், கோவை தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

இந்த வருடம்‌ புதிய வரவாக ராஜா ரவி வர்மன் ஓவிய படைப்புகள் கொலு பொம்மையாக வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், சந்திராயன் -3, முருகனின் ஆறுபடை வீடுகள், அணை, பூரி ஜகந்நாதன் ஆலையம், உதகை ரயில், மரப்பாச்சி பொம்மைகள்,  பஞ்ச பூத ஸ்தலங்கள், வைத்தியராஜ செட், கிருஷ்ணன் ஆண்டாள் குழந்தை வடிவம், விநாயகர் கிரிக்கெட் செட், மணவாளர் முனிவர், நடராஜனுடன் சிவகாமி அம்மை உள்ளிட்ட கொலு பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.

மேலும், சிறப்பாக பெருமாள் ஆண்டாளுடன் பாமா மற்றும் ருக்மணி, லட்சுமி ஐகிரிவர் மற்றும் காலிங்க நர்த்தனன் போன்ற சிலைகள் இடம்பெற்றிருந்தது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. இக்கண்காட்சியில் பல விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது .அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் எனப் பூம்புகார் தெரிவித்துள்ளது.