இந்துஸ்தான் கல்லூரியில் இறகுப்பந்து போட்டி 350 மாணவர்கள் பங்கேற்பு!

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை நடத்தும் இப்போட்டியானது செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் 45 கல்லூரிகளிலிருந்து 350 மாணவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்

இதன் தொடக்க விழாவில் சிஜிஎஸ்டி கோவை உதவி ஆணையர் சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கிவைத்தார். கல்லூரி  செயலாளர்  சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.