நவம்பர் 2-ம் தேதி ‘உலக கருத்தரிப்பு தினம்’

நவம்பர் 2-ம் தேதி ‘உலக கருத்தரிப்பு தினமாக’ கொண்டாடப்படும் தினத்தையொட்டி, இந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டுமில்லாமல் கிராமப்புற பகுதிகளிலும் அதிகரித்து வரும் கருத்தரிப்பு இயலாமையின் பாதிப்புகள் குறித்தும், அதற்கான காரணங்களைக் கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்தும் நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் மருத்துவ இயக்குநர் திரு மனீஷ் பங்கர் பேசுகையில், ’’உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது இரண்டாமிடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டில் முதலிடத்தில் இருக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்து வரும் நேரத்தில், கருதரிப்பு இயலாமைப் பிரச்னையும் அதிகரித்து வருகிறது. ஆனால் இது குறித்து யாரும் வெளிப்படையாக பேசுவதும் இல்லை.  விவாதிப்பது இல்லை.

தற்போது இந்தியாவில், 25 – 30 மில்லியன் தம்பதியினர் கருத்தரிக்கும் வயதுடையவர்களாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் கருத்தரிக்க இயலாமல் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இனியும் இது ஒரு நகர்ப்புற பிரச்னையாகவோ  அல்லது பெண்களுக்கு மட்டுமே  இருக்கும் பாதிப்பாகவோ கருதுவதில் அர்த்தமில்லை. பல விதமான காரணிகளால் இன்று கருத்தரிப்பு இயலாமை என்பது ஒரு வாழ்க்கைமுறை நோயாகி இருக்கிறது. இயந்திரமயமான, பரபரப்பான வாழ்கை, மன அழுத்தத்தை உருவாக்கும் பணிநேரங்கள், மது அருந்தும் பழக்கம் அதிகரிப்பு, ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கவழக்கங்கள், உணவு கலப்படங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் இன்று கருத்திரிப்பு இயலாமைக்கு காரணமாகி இருக்கின்றன.

இவை ஆண்கள் மட்டுமின்றி பெண்களையும் வெகுவாக பாதிக்கிறது. இதனால் கருத்தரிக்க இயலாமையை ஒரு வாழ்க்கை வியாதியாக உருவெடுத்து இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிக்கும் வாய்ப்புள்ள வயதுகளில் இருப்பவர்கள் அல்லது கருத்தரிக்கும் வாய்ப்புள்ள வயதை எட்டியிருப்பவர்கள் தங்களது கருத்தரிப்புக்கான ஆரோக்கியத்தை மிக சாதாரணமாக எடுத்து கொள்ளகூடாது.

உலக கருத்தரிப்பு தினத்தைக்’ கொண்டாடும் இத்தருணத்தில், நாம் ஒவ்வொருவரும் நம் உடல்  மீது அக்கறை கொண்டவர்களாக, நம் உடல் எந்நிலையில் இருக்கிறது என்ற விழிப்புணர்வோடும் இருப்பது மிக மிக அவசியம். கருத்தரிப்பை  முக்கிய அம்சமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.  ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமும் சரியான உணவு பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலமும், சரியான நேரத்தில் நம் உடல ஆரோக்கியம் குறித்த மருத்துவ சோதனைகள் மேற்கொள்வதன் மூலமும், சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தி ஏற்படவிருக்கும் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்களை தவிர்க்க முடியும் என கூறினார்.