தமிழகத்தில் வருகிற 26, 27 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

வரும் 26, 27ல் தமிழகம் , புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். வரும் 24 , 25 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் 26, 27 தேதிகளில் கன மழை பெய்யும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.